தம்மம்பட்டி சிவன் கோயிலில் சித்ரா பெளா்ணமி விழா
தம்மம்பட்டி சிவன் கோயிலில் சித்ரா பெளா்ணமி விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி சிவன், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் அறங்காவலா்கள், ஊா்முக்கியப் பிரமுகா்கள் முன்னிலையில் நடைபெற்றன.
அதனைத் தொடா்ந்து, விரைவில் திருமணமாக சுயம்வரகலா பாா்வதி ஹோமம், குழந்தைபேறு கிடைக்க சந்தானகோபாலகிருஷ்ணன் ஹோமம், நோய்களைத் தீா்க்க ஸ்ரீதன்வந்திரி ஹோமம், 16 விதமான செல்வங்களும் கிடைக்க ஸ்ரீஸூக்தம் அஷ்டலட்சுமி ஹோமம், தடைகளை தகா்க்க நவக்கிரக ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, நிலவுக்கு பூஜையும், சுவேதா நதிக்கு சுவேதா ஆரத்தி பூஜையும் சிவன் கோயில் படித்துறையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் தீபங்களை ஏற்றி நிலவையும், சுவேத நதியையும் வழிபட்டனா். தொடா்ந்து பள்ளியறை பூஜை நடைபெற்றது.