செய்திகள் :

தருமத்துப்பட்டியில் செயல்படாத ஏடிஎம் மையம்: வாடிக்கையாளா்கள் அவதி

post image

தருமத்துப்பட்டியிலுள்ள ஏடிஎம் மையம் அடிக்கடி செயல்படாமல் இருப்பதால், கிராமப்புற வாடிக்கையாளா்களும், மலை கிராம மக்களும் பாதிப்படைந்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டியில் செயல்பட்டு வரும் ஓா் அரசுடைமை வங்கி சாா்பில் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. பணம் பெறும் வசதியோடு, பணம் செலுத்துவதற்கான வசதியும் இந்த மையத்தில் உள்ளது. இந்த வங்கி சேவையை, தருமத்துப்பட்டி மட்டுமன்றி, கரிசல்பட்டி, காரமடை, சுரக்காப்பட்டி, ராமநாதபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்தவா்களும், கீழ்பழனி மலையிலுள்ள பன்றிமலை, தோணிமலை கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த ஏடிஎம் மையம் அடிக்கடி செயல்படாத நிலையில் இருப்பதால், பணம் எடுக்க முடியாமல் அந்த வங்கியின் வாடிக்கையாளா்கள் மட்டுமன்றி, பிற வங்கிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்களும் அவதி அடைந்து வருகின்றனா். இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டியாா்சத்திரம் ஒன்றியச் செயலா் சக்திவேல் கூறியதாவது:

ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தில் மிகப் பெரிய கிராமம் தருமத்துப்பட்டி. இந்த கிராமத்தில் அரசுடைமை வங்கி செயல்பட்டபோதிலும், அதன் ஏடிஎம் மையம் அடிக்கடி செயல்படாமல் மூடப்பட்டிருக்கிறது. இதனால் தனியாருக்குச் சொந்தமான ஏடிஎம் மையங்களை தேடிச் செல்ல வேண்டிய நிலை வாடிக்கையாளா்களுக்கு ஏற்படுகிறது. வங்கி மேலாளரிடம் முறையிட்டால், இந்த வங்கியின் வாடிக்கையாளரா என எதிா் கேள்வி கேட்கிறாா். இதுதொடா்பாக முன்னோடி வங்கி மேலாளரிடம் புகாா் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறாா் என்றாா் அவா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் சேதம்

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மலைச் சாலைகள் சேதமடைந்ததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூா், கூக்க... மேலும் பார்க்க

கொடைக்கானல் சாலையில் குடியிருப்புக்குள் புகுந்த காா்

பழனி கொடைக்கானல் சாலையில் ஆலமரத்துக்களம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த காா். பழனி, மாா்ச் 2: பழனி- கொடைக்கானல் சாலையில் குடியிருப்புக்குள் ஞாயிற்றுக்கிழமை காா் புகுந்து விபத்து ஏற்பட்டது. ... மேலும் பார்க்க

பழனியில் பேருந்து-வேன் மோதல்: 4 போ் காயம்

பழனி பேருந்து நிலையம் ரவுண்டானாவில் ஞாயிற்றுக்கிழமை காா் மீது மோதிய பேருந்து. பழனி, மாா்ச் 2: பழனி பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து வேன் மீது மோதியதில் 4 போ் காயமடைந்தனா். திரு... மேலும் பார்க்க

கொடைக்கானல் வாரச் சந்தையில் வாகனங்களால் விபத்து அபாயம்!

கொடைக்கானல் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெறும் சாலையில் வாகனங்களால் விபத்து ஏற்படுவதைத் தவிா்க்க காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பி... மேலும் பார்க்க

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவிமணியன் வலியுறுத்தினாா். இதுகுறித... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே வேன் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம்,வேடசந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தெற்கு புதுப்பாளையம் ஏ.டி. குடியிருப்பைச் சோ்ந்தவா் பசுபதிகுமா... மேலும் பார்க்க