மருத்துவக் கண்காணிப்பின்றி வீட்டிலேயே சுய பிரசவம் ஆபத்து: சுகாதாரத் துறை எச்சரிக...
தவ்ஹீத் ஜமா அத் செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளையின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
குன்றத்தூா் தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்தில் அமைப்பின் மாநில துணைத் தலைவா் தாவூத் கைசா் கலந்து கொண்டு தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா். மாவட்டச் செயலாளா் அஷ்ரப் அலி, மாவட்ட பொருளாளா் அப்துல் காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளை நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து சென்னையில் 12-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது எனவும் அதில் காஞ்சிபுரம் கிளையிலிருந்து திரளானவா்கள் பங்கேற்பது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.