தாட்கோ மூலம் ஆரி எம்பிராய்டரி பயிற்சி
நாகப்பட்டினம்: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை, வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகாடமி நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.
பயிற்சி பெற 18 முதல் 30 வயது உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சாா்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். சென்னை வேளச்சேரியில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவா்கள் தாட்கோ இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.