செய்திகள் :

தாயகத்தை விட்டு வெளியேறினார் வங்கதேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்!

post image

வங்கதேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் ஹமீத் அவரது தாயகத்தை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற தேசியளவிலான மக்கள் போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்பட்டது. அதன் பின்னர், அந்நாட்டிலிருந்து வெளியேறிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவரும், கடந்த 2013 முதல் 2023 வரை இரண்டு முறை அந்நாட்டின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த அப்துல் ஹமீத் தற்போது அந்நாட்டை விட்டு வெளியேறி தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் சென்றடைந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டதும், அவாமி லீக் கட்சி மற்றும் ஹசீனாவின் அரசில் முக்கிய பதவி வகித்த பலர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது, அமைந்துள்ள இடைக்கால அரசு, கிஷோர்கஞ்ச் மக்கள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் ஹமீத், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவரது சகோதரி ஷேக் ரெஹெனா, ஹசீனாவின் மகன் சஜீப் வஸெத், மகள் சைமா வஸெத் மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், அப்துல் ஹமீத் மீதான வழக்கு குறித்து தங்களுக்கு தெரியும் என்றும் அவர் மீது அந்நாட்டு நீதிமன்றம் அல்லது ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவை எந்தவொரு பயணத் தடையும் விதிக்காததினால் அவர் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!

பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அல்லது ப... மேலும் பார்க்க

தெ.ஆப்பிரிக்கா: விஷம் வைத்து யானை கொலை; 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் பலி

தென்னாப்பிரிக்காவில் வேட்டைக்காரர்களால் 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் பலியாகின.தென்னாப்பிரிக்காவில் பல்வேறு வகை உயிரினங்களை வேட்டைக்காரர்கள் வேட்டையாடி வருகின்றனர். அதனைத் தடுக்கும் முயற்சியில் அந்நாட்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தான் பங்குச்சந்தையிலும் சிவப்புமயம்!

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வரும்நிலையில், அந்நாட்டு பங்குச்சந்தை சரிந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானின் கராச்சி பகுதியில... மேலும் பார்க்க

லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9... மேலும் பார்க்க

புதிய போப் தேர்வு: முதல்கட்ட வாக்கெடுப்பில் முடிவு எட்டப்படவில்லை!

புதிய போப்பை தோ்ந்தெடுப்பதற்கான தேர்தலில், முதல்கட்ட வாக்கெடுப்பில் முடிவு எட்டப்படாததால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.கத்தோலிக்க திருச்சபையின் 266-ஆவது போப் பிரான்சிஸ் வயது முதிா்வு காரண... மேலும் பார்க்க

லாகூரில் அடுத்தடுத்து டிரோன் தாக்குதல்? பாகிஸ்தானில் உச்சகட்ட பதற்றம்!

லாகூர் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து, லாகூர் விமான நிலையம் மூடப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.பாக... மேலும் பார்க்க