தெ.ஆப்பிரிக்கா: விஷம் வைத்து யானை கொலை; 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் பலி
தென்னாப்பிரிக்காவில் வேட்டைக்காரர்களால் 100-க்கும் மேற்பட்ட கழுகுகள் பலியாகின.
தென்னாப்பிரிக்காவில் பல்வேறு வகை உயிரினங்களை வேட்டைக்காரர்கள் வேட்டையாடி வருகின்றனர். அதனைத் தடுக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், அந்நாட்டு தேசிய பூங்காவில் யானை ஒன்றை விஷம்வைத்து, வேட்டைக்காரர்கள் கொன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து. விஷம்வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட யானையின் சடலத்தை சுமார் 200 கழுகுகள் (பிணந்தின்னி அல்லது ராஜாளி கழுகுகள்) கொத்தித் தின்றன. இதனையடுத்து, அவையும் விஷத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, 123 கழுகுகள் பலியாகின.
மேலும், 83 கழுகுகள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. இது, அவையின் இனப்பெருக்கக் காலம் என்றும் கூறப்படுகிறது.
வேட்டைக்காரர்களிடமிருந்து விலங்குகளை பாதுகாப்பது என்பது தினசரி போராக இருப்பதாக பூங்கா நிர்வாகம் கூறுகிறது.