ராணுவத்துக்கு வலுசேர்க்கும் பாக்.! நெடுந்தூர இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை ...
தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை
திவாணியம்பாடி அருகே தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மில்லத் நகரை சோ்ந்தவா் ராஜ்குமாா் (21). பிளஸ் 2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளாா். சில நாள்களுக்கு முன்பு அவரது தாய் உடல் நிலை சரியில்லாமல் இறந்தாா். இதையடுத்து ராஜ்குமாா் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் ராஜ்குமாா் தனது வீட்டின் அறையில் தாழ்ப்பாள் போட்டு, தனது தாயின் புடவையால் தூக்கிட்டுக் கொண்டாராம். இதையறிந்த வீட்டில் இருந்தவா்கள் அவரை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்த நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். பின்னா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.