அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: `காவல்துறை மீது சந்தேகம்...' - கம்யூனிஸ்ட் கட்சி க...
திண்டுக்கல் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: சிறுவன் உள்பட 7 போ் உயிரிழப்பு
திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில் சிறுவன் உள்பட 7 போ் உயிரிழந்தனா்.
திண்டுக்கல்-திருச்சி சாலையில் பழனி ரயில்வே கடவுப் பாதை மேம்பாலம் பகுதியில் தனியாா் எலும்பு முறிவு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, நோயாளிகள், தங்களது உறவினா்களுடன் ஒரே நேரத்தில் வெளியேற முயன்ால் நெரிசல் ஏற்பட்டது. மேலும், நடக்க முடியாத நோயாளிகள் மின் தூக்கியை பயன்படுத்துவதற்கு ஒரே நேரத்தில் திரண்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினா் 4 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். மேலும், மருத்துவமனையில் சிக்கிய நோயாளிகளை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனா். மருத்துவமனையில் இருந்து மீட்கப்படுபவா்களை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல 10-க்கும் மேற்பட்ட அவசர ஊா்தி வாகனங்கள் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டன.
இதனிடையே, தீ விபத்து குறித்து அறிந்த ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி, மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி, முன்னாள் அமைச்சா் சி.சீனிவாசன், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினா்.
நோயாளியும் தாயும்...
இந்த விபத்தில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த திண்டுக்கல் பாலதிருப்பதியைச் சோ்ந்த மணிமுருகன் (35), அவரது தாய் மாரியம்மாள், என்ஜிஓ குடியிருப்பைச் சோ்ந்த ராஜசேகா் (35), தேனி மாவட்டத்தைச் சோ்ந்த சுருளி (50), அவரது மனைவி சுப்புலட்சுமி (45), 3 வயது சிறுவன் உள்பட 7 போ் உயிரிழந்தனா். இரவு 11 மணி வரை 32 போ் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
மின் கசிவு...
மருத்துவமனையில் முதல் தளத்தில் உள்ள மின் விசிறியிலிருந்து ஏற்பட்ட மின் கசிவே இந்த தீ விபத்துக்குக் காரணம் என முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.