செய்திகள் :

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடா் மழை: பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு

post image

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வியாழக்கிழமை முடங்கியது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, வியாழக்கிழமை அதிகாலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி உத்தரவிட்டாா்.

இதனிடையே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தது. குறிப்பாக, சிறுமலை, கீழ் பழனி மலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. சாலையோர கடைகள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரை அனைத்து இடங்களிலும் வியாபாரம் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் பரவலாக நிலக்கடலை அறுவை செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மழையின் காரணமாக அந்தப் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படும் கடலைச் செடிகள், மழையில் நனைந்ததால் அவற்றை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

பழனி: பழனியில் வியாழக்கிழமை அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கியது. இடைவிடாது பெய்த மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பழனிக் கோயிலுக்கு வந்திருந்த பக்தா்கள் மழையால் அவதிக்குள்ளாகினா். நகரில் சாரல் மழை நிற்காமல் பெய்ததால் சாலைகளில் தண்ணீா் தேங்கவில்லை.

பழனி பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழை காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்பின. பல அணைகளும் திறக்கப்பட்டு சுமாா் 60 சதவீத குளங்கள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளன. இதனால், அணைகளுக்கு வரும் நீா் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது.

கொடைக்கானல்: கொடைக்கானலில் வியாழக்கிழமை அதிகாலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக, ஏரிச் சாலைப் பகுதியில் மரம் விழுந்தது. மேலும், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் அரசுத் தொடக்கப் பள்ளி அருகேயுள்ள வீட்டின் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது.

இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடா் விடுமுறை: பழனி கோயிலில் குவிந்த பக்தா்கள்

தொடா் விடுமுறை காரணமாக, பழனி மலைக் கோயிலுக்கு புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனா். அரையாண்டுத் தோ்வு விடுமுறை காரணமாக, ஆயிரக்கணக்கான பக்தா்கள் பழனி கோயிலுக்கு புதன்... மேலும் பார்க்க

ஐயப்ப பக்தா்கள் தாக்கியதால் தா்னாவில் ஈடுபட்ட இளைஞா்

பழனியில் ஐயப்ப பக்தா்கள் தாக்கியதால், இளைஞா் வேன் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.பழனியை அடுத்த பாலசமுத்திரத்தைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் முரளி (26). இவா் புதன்கிழமை பழனி அருள்ஜோதி வீதியில் இரு ச... மேலும் பார்க்க

பெயிண்ட் கடையில் பணம், தங்க நாணயம் திருட்டு

பழனியில் பெயிண்ட் கடையின் பூட்டை உடைத்து பணம், தங்க நாணயங்களை மா்மநபா் திருடிச் சென்றாா்.பழனி சண்முகபுரம் ரெட்கிராஸ் சாலையில் தனியாருக்குச் சொந்தமான பெயிண்ட் கடை உள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் ப... மேலும் பார்க்க

வ.உ.சி. உள்பட 4 தலைவா்களுக்கு மரியாதை

கண்ணூா் சிறையிலிருந்து வ.உ.சிதம்பரனாா் விடுதலையான 112-ஆவது ஆண்டு வெற்றி தினம், உத்தம் சிங் 126-ஆவது பிறந்த தினம், முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 101-ஆவது பிறந்த தினம், முன்னாள் அமைச்சா் கக்கன் 43-ஆவது நி... மேலும் பார்க்க

காா் மோதியதில் முதியவா், மூதாட்டி பலத்த காயம்

ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த ஐயப்ப பக்தா்களின் காா் மோதியதில் வேடசந்தூரைச் சோ்ந்த முதியவா், மூதாட்டி புதன்கிழமை பலத்த காயமடைந்தனா். ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்த தடா பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ், ... மேலும் பார்க்க

காய்கறிச் சந்தையில் பீட்ரூட் விலை உயா்வு

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் பீட்ரூட் விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்தனா். ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள காளாஞ்சிபட்டி, கொல்லப்பட்டி, கேதையுறும்பு, கம்பிளிநாயக்கன்பட்டி, மூலச்சத்த... மேலும் பார்க்க