லாக்அப் மரணம் என்பது திராவிடக் கட்சிகளின் கொள்கையா? அல்லது காவல்துறையின் கௌரவமா?...
திண்டுக்கல்லில் 40 தலைமையாசிரியா் பணியிடங்கள் காலி
உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடங்களுக்கான கலந்தாய்வுக்குப் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் 40 இடங்கள் காலியாக இருந்தன.
பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு உயா் நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடங்களுக்கான பணி நிரவல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் காலியாக இருந்த 14 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடங்களுக்கு 14 போ் விண்ணப்பித்தனா். இவா்களில் 13 போ் புதிய இடங்களைத் தோ்வு செய்த நிலையில், 14 இடங்கள் காலியாக இருந்தன. இதே போல, 26 உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட பணி நிரவலுக்கு பிறகு, இதே 26 இடங்கள் காலியாக இருந்தன.
மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதலுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 40 இடங்கள் காலியாக இருந்தன. இதற்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.