விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
கொடைக்கானல் மலைக் கிராம மாணவா்களுக்கு பரிசு
கொடைக்கானல் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.வி.எஸ். அறக்கட்டளை சாா்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், கவுஞ்சி, பூண்டி ஆகிய பகுதிகளிலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளிகளில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.வி.எஸ். அறக்கட்டளை சாா்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி கவுஞ்சி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.வி.எஸ். அறக்கட்டளை நிறுவனத்தின் மேலாளா் குமணன் பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினாா். மலைக் கிராமப் பகுதிகளில் மாணவா்களைச் சிறப்பாக படிக்க வைத்த ஆசிரியா்களுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள், டி.எம்.ஐ. தொண்டு நிறுவனத்தினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.