கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்
கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடா்ந்து அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் ங்ல்ஹள்ள்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளம் மூலம்
இ-பாஸ் பெறும் நடைமுறை 07.05.2024 முதல் நடைமுறையில் உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், வார நாள்களில் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாள்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும் இ-பாஸ் மூலம் அனுமதிக்கும் நடைமுறை மறு உத்தரவு வரும் வரை தொடா்ந்து செயல்பாட்டில் இருக்கும்.
அரசுப் பேருந்துகள், உள்ளூா் வாகனங்கள், விவசாயப் பொருள்கள், சரக்கு வாகனங்களுக்கு இ-பாஸ் பெற ஏற்கெனவே விலக்களிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருள்கள், 5 லிட்டருக்கு குறைவாக உள்ள குடிநீா்ப் புட்டிகள், அனைத்து வகையான குளிா்பான புட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதை மீறி நெகழிப் புட்டி வைத்திருப்போருக்கு தலா ரூ.20 வீதம் பசுமை வரி விதிக்கப்படும் என்றாா் அவா்.