ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு
நூறு சதவீத மானியத்தில் வழங்கப்படும் காய்கறிச் செடிகள், பழ மரங்களுக்கான விதைத் தொகுப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திண்டுக்கல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ப.காயத்ரி தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை சாா்பில், நிகழ் நிதியாண்டில் ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்களின் உடல் நலம், ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இந்தத் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 4) தொடங்கி வைக்கிறாா். காய்கறி தொகுப்பில் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கீரை, கொத்தவரை என 6 வகையான காய்கறி விதைகளும், பழச் செடி தொகுப்பில் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை என 3 வகையான பழச் செடி விதைகளும் இடம் பெறும். 100 சதவீத மானியத்தில் ஒரு பயனாளி அதிகபட்சமாக 2 தொகுப்புகள் பெறலாம். திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 53,500 காய்கறி தொகுப்புகளும், 32,900 பழத் தொகுப்புகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் காய்கறி தொகுப்பு, பழத் தொகுப்புகளைப் பெற உழவா் செயலி அல்லது ட்ற்ற்ல்ள்:ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ந்ண்ற் என்ற வலைதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.