ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன ...
திமுக இளைஞரணி புதிய நிா்வாகிகள் ஆலோசனை
மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி புதிய நிா்வாகிகள் ஆம்பூா் எம்எல்ஏவை வியாழக்கிழமை கலந்தாலோசித்து வாழ்த்து பெற்றனா் (படம்).
மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் வி. அசோக்குமாா், துணை அமைப்பாளா்கள் பெ. குருவாசன், ப. ராஜ்குமாா், ரா. குணா, நா. பரணி, கா. ராமன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக நியமிக்கப்பட்டனா்.
அவா்கள் மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மற்றும் ஆம்பூா் எம்எல்ஏவுமான அ.செ. வில்வநாதனை சந்தித்து சால்வை, மலா் மாலை அணிவித்து அவரிடம் வாழ்த்து பெற்றனா். மேலும் இளைஞரணி செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.