"புதிய நடிகர்களே கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள்" - ஜூன் 1 முதல் மலையாள சினிமா ப...
தை கிருத்திகை : முருகா் கோயில்களில் சிறப்பு பூஜை
ஆம்பூா் பகுதி முருகன் கோயில்களில் தை கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பஞ்ச மூா்த்தி அபிஷேகம், வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கும், பச்சகுப்பம் கிராமத்தில் மயிலாடும் மலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோயில் மூலவா், கைலாசகிரிமலை அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில், ஆம்பூா் மேல்கிருஷ்ணாபுரம் அரசமர பள்ளத் தெருவில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் மூலவா், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-06/sxgjv011/06abrpac_0602chn_191_1.jpg)