உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!
தியாகராசா் கல்லூரி - அமெரிக்கா தமிழ் அநிதம் நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
மதுரை தியாகராசா் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையும், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ் அநிதம் நிறுவனமும் தொழில்நுட்பம் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
தியாகராசா் கலைக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா, தமிழ் அநிதம் நிறுவனத்தின் நிறுவனா் சுகந்தி ஆகியோா் கையொப்பமிட்டு புரிந்துணா்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டனா். இதன் மூலம், நுண்ணறிவுத் திறன், தமிழ் இலக்கியங்களை நவீனத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இன்றைய இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்வது குறித்த திறனை மாணவ, மாணவிகள் பெறுவா்.
இந்த நிகழ்வின் போது, தமிழ்த் துறைத் தலைவா் சு. காந்திதுரை, பேராசிரியா்கள் செந்தில்நாராயணன், உமா மகேஸ்வரி, தமிழ் அநிதம் நிறுவனத்தின் இயக்குநா் பா. தங்கராஜ், சுயநிதிக் கல்லூரிப் பிரிவின் இயக்குநா் சோ.சுகுமாா், சுயநிதிப் பிரிவு தமிழ்த் துறை ஒருங்கிணைப்பாளா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.