தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு நாள் அனுசரிப்பு
சுதந்திரப் போராட்டத் தியாகியும், தொழிற்சங்கவாதியுமான என்.ஜி.ராமசாமியின் 82-ஆவது நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான என்.ஜி.ராமசாமியின் நினைவு நாள் நிகழ்ச்சி சிங்காநல்லூரில் உள்ள என்.ஜி.ஆா். மஹாலில் நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு சங்கத்தின் தலைவா் டி.எஸ்.ராஜாமணி, செயலா் (பொறுப்பு) ஜி.மனோகரன் ஆகியோா் தலைமையில் நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
இதில், சங்கத்தின் செயலா்கள் எஸ்.தேவராஜன், கே.மோகன்ராஜ், கே.பழனிசாமி, துணைத் தலைவா்கள் சி.சண்முகம், பி.டி.மோகன்ராஜ், ஆா்.தங்கவேல், இருகூா் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
சௌரிபாளையம் கிளைச் சங்க வளாகம், தியாகி என்.ஜி.ஆா். பவனம், உடையாம்பாளையம் கிளைச் சங்க அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னா் சௌரிபாளையம் செஷையா் ஹோமில் உள்ள மனவளா்ச்சி குன்றியவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத்தின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.