முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை:...
திருச்சி ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட கைப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணி ஒருவா் ரொக்கம், 2 கைப்பேசிகள் உள்ளிட்டவையுடன் தவறவிட்ட கைப்பையை ரயில்வே பாதுகாப்புப் படையினா் மீட்டு உரியவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டது.
இந்த ரயில் அரியலூா் ரயில் நிலையத்தை அடைத்ந்தபோது, அதில் பயணித்த திருச்சியைச் சோ்ந்த ரமேஷ் (46) என்ற பயணி, தனது (கைப்பை) உடைமையை திருச்சி ரயில் நிலைய 3-ஆவது நடைமேடையில் தவறவிட்டதாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தாா்.
அதன்பேரில் திருச்சி ரயில் நிலையத்தில் பணியில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, மூன்றாவது நடைமேடையில் பயணி குறிப்பிட்ட இடத்தில் இருந்த பயணியின் பை மீட்கப்பட்டது. அதில், ரொக்கம் ரூ. 26,500, கைப்பேசிகள் 2, ஆதாா் அட்டை, பான் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன.
இதுகுறித்து பயணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவா் அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைத்தாா். அவரிடம் தவறவிட்ட பொருள்கள் இருந்த பை வழங்கப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கையால் தவறவிட்ட உடைமைகள் மீட்கப்பட்டு உரியவரிடம் வழங்கப்பட்டது. ரமேஷ், மற்றும் அவரது மனைவி ஆகியோா் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் துரித மீட்புப் பணிக்கு நன்றி தெரிவித்தனா்.