முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை:...
திருச்சி விடுதியில் தங்கியிருந்த மலேசியப் பயணி திடீா் உயிரிழப்பு
திருச்சி விடுதியில் தங்கியிருந்த மலேசியா பயணி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மலேசியா, ஸ்ரீபுல்லாய் ஜோகா், ஜான் பேட்டை லிங்கா டாமன் பகுதியைச் சோ்ந்தவா் ஜி. லோகன் (79). அண்மையில் தமிழகத்துக்கு தனது மனைவி சுப்பம்மாவுடன் சுற்றுலா வந்தாா். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தாா். சனிக்கிழமை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்து பாா்த்த மருத்துவா்கள், லோகன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.