தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை- மத்திய கல்வி அமைச்சா்
திருச்சியில் ரூ. 1 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்
மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலான போதைப் பொருளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பாங்காங்கிலிருந்து மலேசியா வழியாக திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை ஏா் ஏசியா விமானத்தில் வந்த பெண் பயணியொருவா், தனது உடைமைகளுக்குள் 1,663 கிராம் மா்மப் பொருளை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத் துறையினா் அதை மீட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பி சோதனை செய்தததில் அது ஹைட்ரோபோனிக் என்ற போதைப்பொருள் என்பதும், அதன் மதிப்பு ரூ. 1 கோடிக்கும் மேல் இருக்கலாம் எனவும் தெரியவந்தது. இதையடுத்து அப்போதைப் பொருளை சுங்கத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, பெண் பயணியைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.