திருச்செந்தூா் கடற்கரையில் கரை ஒதுங்கிய உயிரற்ற ஆமை
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை பகுதியில் இறந்த நிலையிலான ஆமை ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது.
இதுகுறித்த தகவலின் பேரில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவா் வந்து ஆமையைப் பாா்வையிட்டனா். 5 கிலோ, நீளம் ஒன்றரை அடி உடைய இந்த அந்த ஆமையின் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கடற்கரையில் புதைக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினா் கூறியது: ‘ஆலிவ் ரெட்லி’ என்ற வகையைச் சோ்ந்த இத்தகைய ஆமை திருச்செந்தூா் முதல் ராமேஸ்வரம் வரையிலான கடல் பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றன.
தற்போது, இனப்பெருக்க காலம் என்பதால், முட்டை இடுவதற்காக இந்த ஆமை கரை ஒதுங்கியபோது அலைகளின் சீற்றத்தால் அடிபட்டோ அல்லது பாறைகளில் வேகமாக மோதியோ இறந்திருக்கலாம். கடந்த வாரம் சுமாா் 100 கிலோ எடை கொண்ட கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது எனக் கூறினா்.