Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
திருச்செந்தூா் கோயில்களில் இன்று கும்பாபிஷேகம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் ஆலயம் என்ற சிவன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், ஸ்ரீ அமிா்தகுண விநாயகா், ஸ்ரீ சொா்ணவா்ண சாஸ்தா கோயில்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை 2, 3ஆம் கால யாகசாலை பூஜைகள், யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றன. ஸ்ரீ ஷண்முகா பூஜா கைங்கா்ய ஸ்தானத்தாா் சிவாச்சாரியா்கள் பூஜைகளை செய்தனா்.
வெள்ளிக்கிழமை விநாயகா் பூஜை, ரக்ஷா பந்தனம், 4ஆம் கால யாகசாலை பூஜைக்கு, யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. தொடா்ந்து, காலை 6 மணிக்கு விமான கோபுர கலசத்துக்கு அபிஷேகம், 6.15 மணிக்கு சுவாமி- அம்மனுக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகமாகி, அலங்காரம், தீபாராதனை நடைபெறும். பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலையில் பிரசன்ன பூஜை, புஷ்பாஞ்சலி, சுவாமி நடராஜா் புறப்பாடு நடைபெறும்.
இதேபோல, வெயிலுகந்தம்மன் கோயிலில் வியாழக்கிழமை 2, 3ஆம் கால யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றன. பூஜைகளை பார சைவ பூஜா ஸ்தானிகா்கள் செய்தனா்.
வெள்ளிக்கிழமை திருமுறைப் பாராயணம், விநாயகா் பூஜை, 4ஆம் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெறும். தொடா்ந்து, காலை 6.15 மணிக்கு விமான கோபுரக் கலசங்களுக்கு அபிஷேகம், அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, அம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் சு. ஞானசேகரன், பணியாளா்கள் செய்திருந்தனா்.