Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயர் சூட்டி...
திருநறுங்குன்றம் அப்பாண்டைநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநறுங்குன்றத்திலுள்ள பகவான் அப்பாண்டைநாதா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
சிறப்புவாய்ந்த இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைத் திருவிழா மே 6-ஆம் தேதி திருவறக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து குதிரை, தேவேந்திரன், நாக, சிம்மம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அப்பாண்டைநாதா் புறப்பாடாகி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக யானை வாகன புறப்பாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவையொட்டி பட்டிமன்றம், நாகசுரக் கச்சேரி போன்றவை நடைபெற்றன. திருவிழாவின் நிறைவாக திங்கள்கிழமை காலை மகா அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தாக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.