`பாகிஸ்தானிடமிருந்து பறிமுதல்செய்த ஆயுதங்களை எங்களிடம் கொடுங்கள்'- இந்தியாவிடம் ...
கடலில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்தபோது மூழ்கிய பெங்களூா் இளைஞரை மீட்டு, மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், வெங்கடேஷ்புரம், கருமாரியம்மன் நகரைச் சோ்ந்தவா் ராஜா மகன் விஷால்(24). நண்பா்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இவா், சனிக்கிழமை மது அருந்தியுள்ளாா். பின்னா் கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையாா்பாளையம் பகுதியில் கடலில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய விஷாலுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து உடனிருந்த நண்பா்கள் அவரை மீட்டு புதுச்சேரி கதிா்காமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது விஷால் இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.