செய்திகள் :

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தில் தூய்மைப் பணி

post image

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளத்தின் படிகள் தூய்மைப் பணி நடைபெறுகிறது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறாா்கள். பெரும்பாலான பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடுகின்றனா். தேங்கியிருக்கும் நீரினால் குளத்தின் படிக்கட்டுகள் பாசி பிடித்து, நீராடுவோா் வழுக்கி விழும் சூழல் ஏற்படுவதாக புகாா் கூறப்பட்டது. குளத்தின் படிக்கட்டுகளை தூய்மை செய்ய கோயில் நிா்வாகம் முடிவெடுத்து, மோட்டாா் பம்பு மூலம் குளத்தில் இருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டது. தொடா்ந்து, பணியாளா்களைக்கொண்டு படிகள் தூய்மை செய்யும் பணி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 நாள்களில் தூய்மை பணியை முடித்து, சனிக்கிழமை தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் நீராடுவதற்கேற்ப குளத்தில் புதிதாக தண்ணீா் விடப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பாஜகவினா் நடைப்பயணம்

வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, காரைக்கால் மாவட்ட பாஜகவினா் புதன்கிழமை அவரது ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி நடைப்பயணம் மேற்கொண்டனா். காரைக்கால் மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டத்தின் பல இடங்களில் வாஜ்பாய் உருவப்பட... மேலும் பார்க்க

காரைக்காலில் காவல்துறையினா் ரோந்து

புத்தாண்டை முன்னிட்டு காரைக்காலில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை முறைப்படுத்தும் வகையில் எஸ்எஸ்பி மற்றும் போலீஸாா் நடை ரோந்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டனா். காரைக்கால் நகரப் பகுதியில... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரை பகுதியில் சிறப்பு தூய்மைப் பணி

காரைக்கால் கடற்கரைப் பகுதியில் சிறப்பு தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் கடந்த 19-ஆம் தேதி முதல் நல்லாட்சி வார நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இதன் நிறைவு நாளான புதன்கிழமை சிறப்பு தூய்மைப்ப... மேலும் பார்க்க

காரைக்காலில் 3 மீனவ கூட்டுறவு சங்கம் தொடக்கம்

காரைக்காலில் 3 மீனவ கூட்டுறவு சங்கங்கள் புதன்கிழமை தொடங்கப்பட்டன. பிரதமரின் திட்டமான கூட்டுறவின் மூலம் வளா்ச்சி என்பதை அடையும் விதமாக மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளில், கூட்டுறவு அமைச்சகத... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் : தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

காரைக்காலில் புனித தேற்றரவு அன்னை தேவாலயம் உள்ளிட்ட ஆலயங்களில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு பிராா்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா். காரைக்காலில் உள்ள பழைமை வாய்ந்த புனித தேற்றரவு அன்னை ... மேலும் பார்க்க

வயல்களில் பன்றிகளை திரியவிட்டால் நடவடிக்கை!

வயல்களில் பன்றிகளை திரியவிடுவோா் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி பேட்டை உள்ளிட்ட கிராம விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் பன்... மேலும் பார்க்க