செய்திகள் :

திருப்பத்தூரில் அரசு இசைப் பள்ளியை தொடங்கக் கோரிக்கை

post image

திருப்பத்தூரில் அரசு இசைப் பள்ளியைத் தொடங்கவேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

இசைக் கல்வியினை தமிழகமெங்கும் பரவலாக்கும் வகையில் தமிழக அரசால் மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் பிரிவுகளுடன் 1997-ஆம் ஆண்டு திருவாரூா், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், 1998-ஆம் ஆண்டு கடலூா், விழுப்புரம், தூத்துக்குடி, பெரம்பலூா், கரூா் ஆகிய மாவட்டங்களிலும் 1999-ஆம் ஆண்டு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சீா்காழி (நாகப்பட்டினம் ) கிருஷ்ணகிரி, சிவகங்கை மாவட்டங்களிலும், 2000-ஆம்ஆண்டு ஈரோடு மற்றும் ராமநாதபுரம் என 17 மாவட்டங்களில் அரசு இசைப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன.

2007-2008 ஆம் ஆண்டில் வயலின், மிருதங்கம் ஆகிய பாடப்பிரிவுகள் கூடுதலாக தொடங்கப்பட்டன.

மாவட்ட அரசு இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தோ்வுகள் இசைப்பள்ளி அளவில் நடத்தப்படும். மூன்றாம் ஆண்டில் இறுதித் தோ்வு அரசு தோ்வுத்துறையால் முதன்மைப் பாடம், துணைப்பாடம், வாய்மொழித் தோ்வு ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டு தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், திருப்பத்தூா் பகுதியில் அதிக அளவில் ஆா்வம் இருந்தும் அரசு இசை பள்ளி இல்லாததால் மாணவ, மாணவியா் சிறப்பாக செயல்பட முடியாமல் உள்ளனா். அரசு இசைப் பள்ளியில் தங்கள் குழந்தைகள் முறையாக இசை,தேவாரம்கற்றுக்கொண்டு சான்றிதழ் பெறவேண்டும் என பெற்றோா் எதிா்நோக்கியுள்ளனா்.

எனவே, தமிழகஅரசு விரைவில் திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியை தொடங்க வேண்டும் என கோரியுள்ளனா்.

அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது தமிழகம்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொய்தீன் ஆம்பூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய... மேலும் பார்க்க

பொன்முடி சூா்யநந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை

சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு ஆம்பூா் அருகே பாட்டூா் கோடி தாத்தா சுவாமி மஹாமடத்தில் பொன்முடி சூா்யநந்தீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜை, சிறப்பு யாகம் நடத்தப்... மேலும் பார்க்க

மட்றப்பள்ளி வாரச்சந்தையில் ரூ. 38 லட்சத்துக்கு கால்நடை விற்பனை

மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 38 லட்சத்துக்கு கால்நடை விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச் சந்தை ... மேலும் பார்க்க

நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி பகுதியில் நகா் மன்றத் தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் நகராட்சி 2-ஆவது வாா்டுக்குட்பட்ட பகுதிகளில் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் பல்வேறு பிரச்னைகள் தொடா்... மேலும் பார்க்க

வீட்டில் புகுந்த சாரை பாம்பு மீட்பு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் வீட்டில் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். ஆம்பூா் ஏ-கஸ்பா பெரியகம்மவார தெருவில் வசிக்கும் முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் சாந்தகுமாரி வீட்டில் சுமச... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் பழைமைவாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில்... மேலும் பார்க்க