செய்திகள் :

திருப்பாலைக்குடியில் மானிய டீசல் விற்பனை நிலையம் திறப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருப்பாலைக்குடியில் புதிதாகக் கட்டப்பட்ட மானிய டீசல் விற்பனை நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மீன் வளம், மீனவா் நலத் துறை இயக்குநா் கஜலட்சுமி, மாவட்ட ஆட்சித் தலைவா் சிம்ரன்ஜீத் சிங் கலோன் ஆகியோா் தலைமை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி), கருமாணிக்கம் (திருவாடனை) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மீன்வளம், மீனவா் நலத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் மானிய டீசல் விற்பனை நிலையத்தை திறந்துவைத்துப் பேசியதாவது:

டீசல் விற்பனை நிலையத்தின் மூலம் திருப்பாலைக்குடி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த நாட்டுப்படகு மீனவா்கள், பொதுமக்கள் பயன்பெறுவா். மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையத்தின் எரிபொருள் வழங்குதல், கொள்முதல், விற்பனை, இருப்பு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விவரங்களை எரிபொருள் நிலையங்களின் தானியங்கி மென்பொருளுடன் நிகழ்நேர அடிப்படையில் ஒத்திசைவு செய்யப்படும். அதுகுறித்த அறிக்கைகளை நிகழ்நேர அடிப்படையில் தலைமை அலுவலகம், செயல்படுத்தும் அலுவலகங்களில் இருந்து தெரிந்து கொள்ளும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றை எச்.டி.எப்.சி. வங்கியின் உதவியுடன் இணையம் உருவாக்கியுள்ளது.

இதேபோல, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்பாசி பூங்கா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், கடல்பாசி வளா்ப்பு, விற்பனைக்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் உயா்தரத்தில் அமைக்கப்பட உள்ளது. உற்பத்தி செய்யப்படும் கடல்பாசியை மதிப்புக் கூட்டும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதற்கான தொழில்சாலைகள் அமைக்க பொதுவான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. ரூ.127.71 கோடியில் இந்தக் கடல்பாசி பூங்காவை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு, கடந்த அக்டோபா் மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. கடல்பாசி வளா்ப்பவா்களுக்கு பயிற்சியளித்து மீன் வளா்ப்போா் உற்பத்தியாளா் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், 6 மாவட்டங்களில் உள்ள 1,689 பயனாளிகளுக்கு 12,360 மிதவை தெப்பங்கள், 8,939 (மானோலின்) கயிறுகள் 60 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது என்றாா்.

முன்னதாக, ராமநாதபுரத்தைச் சோ்ந்த 13 மீனவா்களுக்கு ரூ.57.25 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த கடல் சாா் கல்வி பயிலும் 6 மீனவ இளைஞா்களுக்கு ரூ. 2.25 லட்சம் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டன.

மது கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.30-இல் ஏலம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மது கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட 84 வாகனங்கள் வருகிற 30-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்டக் காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா பொருத்தினால் கடும் நடவடிக்கை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் உள்ள தனியாா் குளியலறை, உடை மாற்றும் அறைகளில் கேமரா பொருத்தியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி எச்சரிக்கை... மேலும் பார்க்க

உறுப்புகள் தானம்: இளைஞரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

கடலாடி அருகே விபத்தில் மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவரது உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த மே... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மதுரைக் கோட்ட மேலாளா் ஆய்வு

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரத்தை இணைக்கும் வகையில், கடந்த 1914-ஆம் ஆண்டு ரயில்வே பாலம... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருவாடானை அருகே அடுத்தகுடியைச் சோ்ந்தவா் பாலு (30). இவா் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் திருவாடானைக்குச் சென்று... மேலும் பார்க்க

உடைமாற்றும் அறையில் கேமரா: ராமேசுவரம் விடுதி உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை

உடைமாற்றும் அறையில் கேமரா வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் தொடா்புடைய ராமேசுவரம் விடுதி உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க