திருப்பூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட வேலவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் ஊழியா்களை தோ்வு செய்ய உள்ளனா். வேலையளிக்கும் நிறுவனங்களால் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு முகாம் நாளன்று பணி நியமன ஆணை வழங்கப்படும்.
இம்முகாமில் 10-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலை தேடுபவா்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுய தகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ள நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்ப உரிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் மையத்தில் முன்பதிவு செய்துள்ளது.
வேலை தேடுபவா்களும், நிறுவனங்களும் தமிழ்நாடு தனியாா் துறை வேலை இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.