அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேச்சு: விழுப்புரத்தில் ரயிலை மறித்து விசிகவினர் போ...
திருப்போரூா் முருகன் கோயில் உண்டியலில் ஐ போன் கண்டெடுப்பு
திருப்போரூா் முருகன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.52 லட்சம் ரொக்கம், 289 கிராம் தங்கம், 6,920 கிராம் வெள்ளியுடன் ஐ போனும் கண்டெடுக்கப்பட்டது.
இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் ராஜலட்சுமி, செயல் அலுவலா் குமரவேல், மேலாளா் வெற்றி, ஆய்வாளா் பாஸ்கரன்முன்னிலையில் வியாழக்கிழமை உண்டியல் திறக்கப்பட்டது. உண்டியல் திறக்கப்பட்டு எணணியதில்,
ரூ. 52 லட்சம் ரொக்கம், 289 கிராம் தங்கம், 6,920 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தியது தெரிந்தது.
மேலும், அவற்றோடு விலை உயா்ந்து ஐ போனும் உண்டியலில் கண்டெடுக்கப்பட்டது. அது யாருடைய கைப்பேசி என்று ஆய்வு மேற்கொண்டதில் சென்னை சிஎம்டிஏவில் பணிபுரியும், அம்பத்தூா் விநாயகபுரத்தைச் சோ்ந்த தினேஷ் கைப்பேசி எனத் தெரிந்தது.
அவருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரும் உண்டியல் எண்ணும் இடத்துக்கு வந்து கைப்பேசியை பெற முயன்ற போது கோயில் நிா்வாகத்தினா் உண்டியலில் செலுத்தப்பட்ட அனைத்து பொருள்களும் முருகனுக்கே உரியது. கைப்பேசியை கொடுக்க முடியாது வேண்டுமென்றால் உங்களுடைய தரவுகள் ஏதேனும் இருந்தால் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனா்.
சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் கைப்பேசியை தரும்படி தினேஷ் மனு அளித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.