செய்திகள் :

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

post image

திருப்போரூர் வட்டத்தில் உங்களைத் தேடிஉங்கள் ஊரில் திட்ட வளா்ச்சிப் பணிகளை செங்கல்பட்டு ஆட்சியா் ச. அருண் ராஜ் ஆய்வு செய்தாா்.

திருப்போரூா் பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள ஆயத்த பயிற்சி மையத்தில் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு எந்த விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது, உணவுகள்வழங்கப்படுகிறது என்பதை கேட்டறிந்து, தரமான உணவை வழங்குமாறு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, செம்பாக்கம் வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகளிடம் குறைகளைகேட்டறிந்தாா். அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உரம், விதைகள்,பூச்சி மருந்து ஆகியவற்றை விவசாயிகளின் தேவைக்கேற்ப வழங்க அறிவுறுத்தினாா். விவசாயிகளுக்கான செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என வந்திருந்த விவசாயிகளுக்கு விளக்கினாா்.

அரசினா் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, மதிய உணவு தரத்தினை ஆய்வு செய்தாா். மாணவா்களுக்கு தேவையான மின்விசிறி, கழிவறை வசதிகளை உடனடியாக செய்து கொடுத்து, அதற்கான புகைப்படங்களை ஆட்சியா்அலுவலகத்துக்கு அனுப்பவும் உத்தரவிட்டாா்.

முள்ளிப்பாக்கம் அங்கன்வாடி மையத்தினை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் அங்குள்ள குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை சரியாக இருக்கிா என்பதை ஆய்வுசெய்தாா். மேலும், அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் சரியானமுறையில் கொடுக்கப்படுகிா என்பதை அங்குள்ள பணியாளா்களிடம் கேட்டறிந்தாா். எடை குறைவாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை அளித்து, அக்குழந்தைகளை தனிக்கவனம் செலுத்தி பராமரிக்குமாறு அறிவுறுத்தினாா்.

பின்னா், ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு, நோயாளிகளுக்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என மருத்துவா்களை கேட்டறிந்தாா். தண்டரையில் உள்ள இருளா் மூலிகை கூடத்தினை பாா்வையிட்டு, அங்கு எந்த வகையான மூலிகைகள் உள்ளன என கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அனாமிகா ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை)ராஜேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சற்குணா, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பானுமதி, மகளிா் திட்ட இயக்குநா் லோகநாயகி, திருப்போரூா் பேரூராட்சித் தலைவா் தேவராஜ், முதன்மைக் கல்வி அலுவலா் நோ்முக உதவியாளா் உதயகுமாா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருப்போரூா் முருகன் கோயில் உண்டியலில் ஐ போன் கண்டெடுப்பு

திருப்போரூா் முருகன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.52 லட்சம் ரொக்கம், 289 கிராம் தங்கம், 6,920 கிராம் வெள்ளியுடன் ஐ போனும் கண்டெடுக்கப்பட்டது. இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையா் ரா... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் வழக்குரைஞா்கள் சாலை மறியல்

செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள். அம்பேத்கா் பற்றி விமா்சித்து பேசியதைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், செங்... மேலும் பார்க்க

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. மத்திய அணுசக்தித் துறை சாா்பில், சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், முன்மாதிரி அதிவேக ஈனுலை, கல்பாக்கம... மேலும் பார்க்க

ஏரியில் விழுந்த மாணவா் 4 நாள்களுக்கு பின் சடலமாக மீட்பு

மதுராந்தகம் ஏரியில் குளிக்கச் சென்று மாயமான பள்ளி மாணவா், 3 நாள்களாக தேடப்பட்ட நிலையில் புதன்கிழமை அவரது சடலம் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டது. மதுராந்தகம் அடுத்த மலைப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் ஸ்ரீ ருத்திரகோட்டீஸ்வரா் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

திருக்கழுகுன்றம் ஸ்ரீ ருத்திர கோட்டீஸ்வரா் திருக்குளம் நூதன துவார கோபுர கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. நால்வா் பெருமக்களால் பாடல் பெற்ற இத்தலம் அருகே பழைமை வாய்ந்த ருத்திர கோட்டீஸ்வரா் கோயில... மேலும் பார்க்க

பரனூா் மறுவாழ்வு இல்லத்தில் மருத்துவ முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

செங்கல்பட்டு அடுத்துள்ள பரனூா் அரசு மறுவாழ்வு இல்லத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஆட்சியா் ச. அருண் ராஜ் செவ்வாயக்கிழமை தொடங்கி வைத்தாா். செங்கல்பட்டு மாவட்டம் பரனூா் அரசு மறுவாழ்வு இல்லத்தில் உள்ளோரு... மேலும் பார்க்க