Career: இன்ஜினீயரிங் படித்தவரா நீங்கள்? - ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம்!
திருமலை 4-ஆம் நாள் தெப்போற்சவம்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உலா
திருமலையில் ஏழுமலையான் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான புதன்கிழமை மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்தனா்.
திருமலையில் ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியுடன் நிறைவு பெறும் விதம் 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தெப்போற்சவம் விமரிசையாக தொடங்கியது. தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான புதன்கிழமை மாலை ஏழுமலையான் கோயில் கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருமலையில் உள்ள திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் 5 சுற்றுகள் வலம் வந்தாா். தெப்பம் அருகில் வந்தபோது பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
விழாவையொட்டி புதன்கிழமை சஹஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டது.
விழாவில், திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.