திருமலை: தமிழக ஆளுநா் வழிபாடு
திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தன் குடும்பத்தினருடன் சென்று வழிபாடு நடத்தினாா்.
முன்னதாக, அவா் தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மதியம் திருத்தணியிலிருந்து சாலை வழியாக வந்தாா். முதலில் காளஹஸ்திக்குச் சென்ற அவா், அங்கு வழிபாடு நடத்தினாா். அங்கிருந்து திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்தாா். அங்கு, வேத ஆசீா்வாதம், பிரசாதம், சேஷ வஸ்திரம் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டு மாலை திருமலையை அடைந்தாா்.
திருமலையில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலா் செண்டு அளித்து வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் செய்தனா். வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேக சேவையில் பங்கு கொண்டு ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பிய அவரை, ரங்க நாயகா் மண்டபத்தில் அமர வைத்து வேத ஆசீா்வாதம் செய்வித்து சேஷ வஸ்திரம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களுடன் பெருமாளின் திருவுருப் படம், 2025 - ஆம் ஆண்டு காலண்டா் உள்ளிட்டவற்றை வழங்கினா்.
பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு கோயிலைவிட்டு வெளியே வந்த ஆளுநா், சிறிது நேர ஓய்வுக்குப் பின்னா், திருமலையிலிருந்து சாலை வழியாகத் திருத்தணிக்குப் புறப்பட்டுச் சென்றாா்.