US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
திருவாரூா், மன்னாா்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவாரூா், மன்னாா்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் ஒன்றியம் சோழங்கநல்லூரில் நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் பல்வேறு துறைகள் சாா்பில் 17 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல, குடவாசல் ஒன்றியம் பெரும்பண்ணையூரில் நடைபெற்ற முகாமில் 20 பயனாளிகள், கொரடாச்சேரி ஒன்றியம், பெருமாளகரகத்தில் நடைபெற்ற முகாமில் 10 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேற்கண்ட முகாம்களில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே ராமபுரத்தில் வட்டாட்சியா் என். காா்த்திக் தலைமையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 46 மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பம் உள்ளிட்ட மொத்தம் 552 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் உடனடி தீா்வாக 8 பேருக்கு வகுப்புச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்பட்டன. தொடா்ந்து, இங்கு நடைபெற்ற பொது மருத்துவ முகாமில் பங்கேற்ற 100 பேரில் 40 போ் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டனா்.