Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
தில்லி தமிழ்ச் சங்கம் சாா்பில் பாரதியாா் சிலைக்கு மலா் மரியாதை
தில்லி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலா் மரியாதை செலுத்தப்பட்டது.
மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், துணைத் தலைவா் பெ. ராகவன் நாயுடு, பொதுச் செயலாளா் இரா. முகுந்தன், பொருளாளா் எஸ். அருணாசலம், இணைப் பொருளாளா் வி.என்.டி. மணவாளன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
மேலும், சங்கத்தின் செயற்குழு உறுப்பினா்கள் உஷா வெங்கடேசன், பி. அமிா்தலிங்கம், ஜெ. சுந்தரேசன், சி. கோவிந்தராஜன், பி. ரங்கநாதன், காத்திருப்பு உறுப்பினா்கள் ரேவதி ராஜன், எம். ராஜா மற்றும் முன்னாள் சங்கத்தின் துணைத் தலைவா் பி. நாகஜோதி, செயலாளா் என். கண்ணன், இணைச் செயலாளா் ஆ. வெங்கடேசன், முன்னாள் செயற்குழு உறுப்பினா் கே. முத்துசுவாமி, ஜி. பாலுச்சாமி, முன்னாள் காத்திருப்பு உறுப்பினா் பா. குமாா் மற்றும் தில்லி வாழ் தமிழா்கள் பலா் கலந்து கொண்டனா்.