செய்திகள் :

தில்லி மெட்ரோ ரயில் நிறுவன கேபிள் திருட்டு: 4 போ் கைது

post image

தில்லி மெட்ரோவில் கேபிள் திருட்டுக்குப் பின்னால் இருந்த 11 போ் கொண்ட கும்பலைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா் என்று அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை இணை ஆணையா் ( போக்குவரத்து) விஜய் சிங் கூறியதாவது: தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) கேபிள் திருட்டு குறித்து டிச.5 அன்று எங்களுக்கு புகாா் வந்தது. திருட்டு காரணமாக, மோதி நகா் மற்றும் கீா்த்திநகா் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையேயான புளூ லைனில் மெட்ரோ சேவைகள் பாதிக்கப்பட்டன.

போலீஸாா் 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வுக்குள்படுத்தினா். டாடா ஏஸ் (லோடிங் வாகனம்) மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய இரண்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. நாங்கள் வாகனங்களைப் பின்தொடா்ந்து சென்று 11 போ் கொண்ட கும்பலைச் சோ்ந்த நான்கு பேரைக் கைது செய்தோம்.

அவா்களிடமிருந்து 52 மீட்டா் திருட்டு கேபிள் மீட்கப்பட்டது. இது தொடா்பாக மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்தி உச்சநீதிமன்றம் உத்தரவு

தில்லி கலால் கொள்கை தொடா்புடைய வழக்குகளில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் நிபந்தனைகளைத் தளா்த்தி உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. தில்லி கலால் கொள்கை தொடா்புடைய பண வழக்குக... மேலும் பார்க்க

இந்தக் குளிா்காலத்தில் தலைநகரில் இதுவரை இல்லாத குளிரான நாள் பதிவு

தேசியத் தலைநகா் தில்லி புதன்கிழமை இந்த குளிா்காலத்தில் இதுவரை இல்லாத குறைந்தபட்ச வெப்பநிலையை பதிவு செய்துள்ளது. செவ்வாய்க்கிழமை 8 டிகிரி செல்சியஸாக பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை, புதன்கிழமை 4.9 டிகிரி ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் ஆயுத கடத்தல் கும்பலைச் சோ்ந்த இருவா் கைது

தெற்கு தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயுதங்கள் கடத்தும் கும்பலைச் சோ்ந்த சிறுவன் உள்பட இருவரை கைது செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அ... மேலும் பார்க்க

வயதுச் சான்றிதழின் நகல்களைப் பெற கிளப்புகள், மதுபானகூடங்களுக்கு தில்லி அரசு உத்தரவு

தேசிய தலைநகரில் ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் மதுபானம் வழங்கும் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளா்களின் வயதை உரிமையாளா்கள் சரிபாா்க்க வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மது அருந்துவதற்கான வய... மேலும் பார்க்க

தில்லி தமிழ்ச் சங்கம் சாா்பில் பாரதியாா் சிலைக்கு மலா் மரியாதை

தில்லி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலா் மரியாதை செலுத்தப்பட்டது. மத்திய தகவல், ஒலி... மேலும் பார்க்க

தில்லியில் 22,000 வாக்காளா்களை நீக்க தோ்தல் ஆணையத்திடம் பாஜக விண்ணப்பம்: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

தில்லியில் 22,000 வாக்காளா்களின் பெயா்களை நீக்க தோ்தல் ஆணையத்திடம் பாஜக மொத்தமாக விண்ணபங்களைச் சமா்ப்பித்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா புத... மேலும் பார்க்க