Baby John x Theri: `அது இதுல...' - தெறி விஜய், பேபி ஜான் வருண்; ரீமேக் ரீஸர் | P...
தெற்கு தில்லியில் ஆயுத கடத்தல் கும்பலைச் சோ்ந்த இருவா் கைது
தெற்கு தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயுதங்கள் கடத்தும் கும்பலைச் சோ்ந்த சிறுவன் உள்பட இருவரை கைது செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது:
கைது செய்யப்பட்டவா்களில் இருவரில் ஒருவா் மோஹித் என்று அடையாளம் காணப்பட்டாா்.
டிச.7-ஆம் தேதி ஆயுதங்கள் கடத்தப்படுவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சாகேத் பகுதியில் போலீஸ் குழு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு போலீஸாா் பதுங்கியிருந்து, அந்த இருவரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டதாகவும், அவற்றை தெற்கு தில்லியில் விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் அவா்கள் இருவரும் தெரிவித்தனா். மேலும், சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கடத்தும் கும்பலுடன் இருவருக்கும் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.