மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
தில்லி முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
நமது நிருபா்
தில்லி முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ், சில தனியாா் நிறுவனங்களைச் சோ்ந்தவா்களின் வீடுகள், இடங்களில் அமலாக்க துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களில் ஊழல் நடைபெற்ாக எழுந்த புகாா் தொடா்பான பணமுறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 13 இடங்களில் இந்த சோதனை நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த 2018-19-ஆம் ஆண்டில், ரூ.5,590 கோடியில் அனுமதி அளிக்கப்பட்ட 24 மருத்துவமனைத் திட்டங்கள் கணிசமான செலவு அதிகரித்த பின்பும் திட்டங்கள் முழுமையடையாமல் இருப்பதாக பாஜக புகாா் அளித்தது.
கேஜரிவால் கண்டனம்: இந்தச் சோதனை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் கேஜரிவால் வெளியிட்ட பதிவில் , ‘மருத்துவமனை கட்டுமானம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டபோது பரத்வாஜ் அமைச்சராகக் கூட இல்லை. மோடி அரசின் தவறான கொள்கைகள் மற்றும் ஊழல் நடைமுறைகளுக்கு எதிரான வலுவான குரலாக ஆம் ஆத்மி கட்சி இருப்பதால் குறிவைக்கப்படுகிறது. எங்கள் குரலை ஒருபோதும் அடக்க முடியாது. பாஜகவின் இந்த சோதனைகளால் ஆம் ஆத்மி பயப்படாது’ என்று தெரிவித்துள்ளாா்.