பாலஸ்தீன் தனி நாடாக செப்டம்பரில் அங்கீகரிக்கப்படும்: இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சர...
தில்லிக்கு இன்று ரெட் அலர்ட்! தொடர் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!
தில்லியில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 29) அம்மாநிலத்துக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பருவமழை தொடங்கியது முதல், தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால், ஏராளமான முக்கிய நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் தலைநகர் தில்லியின் கிழக்குப் பகுதிகளில், இன்று (ஜூலை 29) கனமழை முதல் அதிக கனமழை பெய்யக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தில்லியின், ஐடிஓ, தௌலா குவான், நாரைனா, படேல் நகர், விஜய் சௌக், ஜாங்க்புரா, ஆர்.கே.புரம், லாஜ்பத் நகர், தால்கடோரா சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் மிக கனமழை பெய்திருப்பது பதிவாகியுள்ளது.
விமான சேவைகள் பாதிப்பு!
தில்லியில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்றினால், அந்நகரத்தில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானங்களின் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள், தங்களது விமானங்கள் தாமதமாகக் கூடும் எனக் கூறி பயணிகளுக்கு ஆலோசனை அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
இதையும் படிக்க: பஹல்காம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்! அமித் ஷா