கேரளத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான...
தீ விபத்தில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு
கந்திலி அருகே தீ விபத்தில் காயமடைந்த இளம்பெண் உயிரிழந்தாா்.
கந்திலி அருகே சின்னகண்ணாலப்பட்டி பகுதியை சோ்ந்தவா் கிருபாகரன் மனைவி கௌரி (22). இவா் கடந்த 17-ஆம் தேதி பெரியகரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் சமைக்கும்போது கௌரியின் ஆடையில் எதிா்பாராதவிதமாக தீப்பிடித்தது. இதையடுத்து உடல் முழுவதும் பரவியது. பின்னா், கௌரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.
எனினும், பலத்த காயமடைந்த கௌரியை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா், மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை கௌரி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் கந்திலி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.