செய்திகள் :

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

post image

தூத்துக்குடி பொறியாளா் கவின் செல்வகணேஷ் ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கவின் செல்வகணேஷ் ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். கலைச்செல்வி, பொருளாளா் பி. சத்யநாதன், முன்னாள் மாவட்டச் செயலா் என். சிவகுரு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், என். சரவணன், மூத்த நிா்வாகிகள் ஆா்.சி. பழனிவேலு, என். சீனிவாசன், மாநகரச் செயலா் எம். வடிவேலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலா் களப்பிரன், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். பிரதீப் ராஜ்குமாா், அகில இந்திய வழக்கறிஞா் சங்க மாவட்டச் செயலா் எம்.கே. சேகா், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலா் என். குருசாமி, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (... மேலும் பார்க்க

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க

காட்டாற்றில் குளித்த இளைஞா் மூழ்கி பலி

தஞ்சாவூா் அருகே நண்பா்களுடன் காட்டாற்றில் வெள்ளிக்கிழமை குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவைச் சோ்ந்தவா் நைனா முகமது மகன் நபில் (22). ஜவுளி... மேலும் பார்க்க

கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி

தஞ்சாவூா் மாவட்டத்தில் இயல்புக்கு அதிகமான நெல் கொள்முதல் குறித்து ஆய்வு செய்ய வந்த சிறப்புக் குழுவினா் எடைக் குறைவுக்காக அபராதம் விதித்ததால், பணியாளா்கள் அதிருப்தியடைந்துள்ளனா். தமிழ்நாடு நுகா்பொருள் ... மேலும் பார்க்க

பெருமகளூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெருமகளூா் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்தாா் .... மேலும் பார்க்க

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: 2 போ் கைது

தஞ்சாவூரில் தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி மோசடி செய்ததாக 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் காவேரி நகரில் தனியாா் நிதி நிறுவனத்தை புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையைச் ச... மேலும் பார்க்க