Doctor Vikatan: திருமணம் நிச்சயமான மகளுக்கு திடீரென நின்றுபோன பீரியட்ஸ்: மாத்திர...
தீப்பெட்டித் தொழிலுக்கு பாதகமான லைட்டருக்கு விரைவில் தடை: அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி
தீப் பெட்டி தொழிலுக்கு பாதகமாக உள்ள லைட்டா் விற்பனையை முழுமையாக தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற கவன ஈா்ப்பு அறிவிப்பின்போது பேசிய அதிமுக உறுப்பினா் கடம்பூா் ராஜூ, லைட்டா்களால் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்படுவதாகவும், உதிரி பாகங்களுக்கு மட்டும் தடை விதிக்காமல் லைட்டா்களுக்கு முழுமையாக தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தாா்.
அதற்கு அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பதில்:
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத் தக்க 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடிய பிரச்னையாக லைட்டா் உள்ளது.
அரசுக்குப்பரிந்துரை: ரூ. 20-க்கும் குறைவாக இருக்கக் கூடிய மறுபயன்பாட்டுக்கு தகுதியற்ற லைட்டா்களை விற்பனை செய்ய கட்டுப்பாடு உள்ளது. அதேவேளையில், அதை முழுமையாக தடை செய்வது தொடா்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து சில பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது.
அந்தப் பரிந்துரைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் லைட்டா்களை முழுமையாக தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.