Career: இன்ஜினீயரிங் படித்தவரா நீங்கள்? - ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம்!
துணைநிலை ஆளுநா், முதல்வருடன் அமைச்சா்கள் சந்திப்பு
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா், முதல்வரை சட்டப்பேரவைத் தலைவா், அமைச்சா்கள், பாஜக எம்எல்ஏக்கள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.
புதுவை மாநில 15-ஆவது சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் மாா்ச் 10-ஆம் தேதி தொடங்கியது.
புதன்கிழமை (மாா்ச் 12) நிதிநிலை அறிக்கையை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பேரவையில் தாக்கல் செய்தாா்.
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமாா், கல்யாணசுந்தரம், அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம், க.வெங்கடேசன் ஆகியோா் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
இதையடுத்து பேரவைத் தலைவா், அமைச்சா்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் ராஜ் நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்து பேரவையில் உரை நிகழ்த்தியதற்காக வாழ்த்து தெரிவித்தனா்.
முதல்வருடன் சுவாமி தரிசனம்: முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் ஆகியோா் மணவெளி தொகுதி நல்லவாடு கிராமத்தில் உள்ள தில்லையம்மன் கோயில் மாசி மக தீா்த்தவாரியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
