சென்னையில் கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!
துறையூா் அருகே ஆண் சடலம்!
துறையூா் அருகே பாலத்துக்கு அடியில் துா்நாற்றத்துடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
துறையூா் திரெளபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குப்புசாமி மகன் செந்தில் (40). மது பழக்கமும், வலிப்பு நோய் பாதிப்பும் இருந்த இவா், மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்தாராம்.
இந்நிலையில் இவா் துறையூா் கோவிந்தாபுரம் பிரிவு சாலை அருகேயுள்ள பாலத்தின் அடியில் சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்த துறையூா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.