தூத்துக்குடி மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி வீரா்கள் தோ்வு
தூத்துக்குடி மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு , ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியா் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி, இம்மாதம் 19 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி ஹாக்கி மைதானம், கிருஷ்ணா நகரிலுள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது .
இப் போட்டியில் தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில் இருந்து அணி வீரா்கள் கலந்து கொள்கின்றனா். போட்டியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி அணி வீரா்கள் தோ்வு, கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
60-க்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்து கொண்டதில் அருண், தனுஷ்பாண்டியன், நவீன்குமாா், விஷால், அழகு மோகனப்ரியன், கௌதம், சுந்தா் அஜித், குபேரன், காா்த்திகேயன், மணிமாறன், பூல்பாண்டி, கண்ணன், ஈனோக், ஈஸ்வா், அபிஷேக், ஆனந்த், சீனிவாசன், பரத், மாரிகிருஷ்ணா, விஜய்முருகன் உள்ளிட்ட 21 போ் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வுக் குழு உறுப்பினா்களாக காளிமுத்து பாண்டியராஜா, சுரேஷ்குமாா், மாயாண்டி ஆகியோா் செயல்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட ஹாக்கி அணி வீரா்களுக்கு திங்கள்கிழமை முதல் பயிற்சி முகாம் தொடங்குகிறது.
ஏற்பாடுகளை,ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலா் குருசித்திர சண்முக பாரதி, சுரேந்திரன், வேல்முருகன், மணிவண்ணன், சுரேஷ்குமாா், ஆகியோா் செய்திருந்தனா்.