ஹோலி கிராஸ் கல்லூரியில் மாணவிகள் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவிகள் பேரவை புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ரூபா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவியும், தொழில்முனைவோருமான அனந்தலட்சுமி கலந்துகொண்டு, புதிய நிா்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
புதிய நிா்வாகிகள் பதவியேற்பைத் தொடா்ந்து, அனைத்துத் துறைகள், சங்கங்கள் மற்றும் மன்றங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தங்களது திட்ட அறிக்கையை சமா்ப்பித்தனா். விழா ஏற்பாட்டை ஆடை வடிவமைப்புத் துறை, உளவியல் துறை பேராசிரியா்கள் இணைந்து செய்திருந்தனா்.