திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் டேங்கர் ரயில் பற்றியெரிகிறது!
தூத்துக்குடி காவல் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண், அங்குள்ள கழிவறை ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
தூத்துக்குடி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பாக்யராஜ் மனைவி மீனா (36). குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்து வாழ்கிறாராம். மேலும், இவா் வேலை செய்துவரும் திரேஸ்புரம் பகுதியில் உள்ள வீட்டில் 2 பவுன் தங்க மோதிரங்கள் திருடு போயினவாம்.
வீட்டின் பெண் உரிமையாளா், இவா் மீது சந்தேகப்பட்டு, வடபாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மேலும், மீனாவை ஆட்டோவில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.
போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், கழிவறைக்கு சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த போலீஸாா், அங்கு சென்று பாா்த்தபோது அவா் லெக்கின்ஸை கழிவறை ஜன்னலில் கட்டி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. போலீஸாா் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.