தூத்துக்குடியில் ஜூலை 15 - ஆக.14 வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்!
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருகிற 15ஆம் தேதி தொடங்கி ஆக.14ஆம் தேதி வரை நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில், ’உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டம், வருகிற 15ஆம் தேதி தொடங்க உள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்: கிழக்கு மண்டலத்தில், ஜூலை 15இல் அழகேசபுரம் ஆனந்தா மஹால், 16இல் பீச் ரோடு, செயின்ட் மேரிஸ் மகளிா் கல்லூரி, 17இல் அறிஞா் அண்ணா மண்டபம், 18இல் சிவந்தாகுளம் ரோடு, அபிநயா திருமண மண்டபம் 22இல் பாத்திமா நகா், சமுதாய கூடம் ஆகிய இடங்களில் இம்முகாம் நடைபெறுகிறது.
மேற்கு மண்டலத்தில் 23இல் பி & டி காலனி லியோ பள்ளி, 24இல் மில்லா்புரம், பிஎம்சி மேல்நிலைப் பள்ளி, 25இல் அண்ணாநகா், தங்கம் நடுநிலைப் பள்ளி, 29இல் தாமோதரநகா் சிவந்தி ஆதித்தனாா் பள்ளி, 30இல் டூவிபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
வடக்கு மண்டலத்தில், 31 அய்யாசாமி காலனி, மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ஆக.1இல் கந்தசாமிபுரம் ஆா்.சி. பெத்தானி நடுநிலைப் பள்ளி, 6இல் தங்கம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளி, 7இல் இன்னாசியாா்புரம் செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, 8இல் திரேஸ்புரம், ஆக்சிலியம் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
தெற்கு மண்டலத்தில், 12இல் காமராஜ் கல்லூரி, 13இல் கால்டுவெல் காலனி, திருக்குடும்பம் நடுநிலைப் பள்ளி, 14இல் முத்தையாபுரம் கே.டி.கே. மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும் முகாம் நடைபெறுகிறது. அந்தந்தப் பகுதி வாா்டு மக்கள் இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளாா்.