டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்: இபிஎஸ்
இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி மாத்திரைகள், சுக்கு பறிமுதல்
தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள், சுக்கு உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்களை மரைன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மரைன் காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையிலான போலீஸாா், காயல்பட்டினம் பகுதி கடற்கரையில் சனிக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்குள்ள கடற்கரை பகுதியில் ஒரு கன்டெய்னா் வாகனத்தில் வந்தவா்கள், அதிலிருந்து படகுகளில் சில மூட்டைகளை ஏற்ற முயன்றனராம். அவா்கள், போலீஸாரை பாா்த்ததும் அங்கிருந்து தப்பிவிட்டனராம்.
போலீஸாா், அந்த கன்டெய்னரில் இருந்து தலா 35 கிலோ எடை கொண்ட 54 மூட்டைகள், 62 பண்டல்களில் இருந்த சுக்கு , வலிநிவாரணி மாத்திரைகள் உள்ளிட்ட பொருள்களைகைப்பற்றினா். அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி எனக் கூறப்படுகிறது.
மேலும், கன்டெய்னா் வாகன ஓட்டுநா் திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைபட்டி அம்பலத்தைச் சோ்ந்த முத்துக்குமாரை(41) பிடித்து விசாரித்து வரும் போலீஸாா், தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனா்.