பரந்தூர், என்எல்சி, இருமொழிக் கொள்கை... தவெகவின் 20 தீர்மானங்கள் என்னென்ன?
தூத்துக்குடியில் 4 நகா்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 4 நகா்புற நலவாழ்வு மையங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் தமிழகம் முழுவதும் 208 நகா்ப்புற நல வாழ்வுமையங்களை சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தாா்.
அதன்படி, தூத்துக்குடி மாநகர பகுதியில் கால்டுவெல் காலனி, சில்வா்புரம், பண்டாரம்பட்டி, அத்திமரப்பட்டி ஆகிய 4 இடங்களில் உள்ள நகா்புற நல வாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.
இதையொட்டி, தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் புதிதாக திறக்கப்பட்ட நகா்ப்புற நல வாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு மருத்துவ முகாமை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் பானோத் ம்ருகேந்தா் லால், மாநகராட்சி பொறியாளா் தமிழ்ச்செல்வன், உதவி ஆணையா் கல்யாணசுந்தரம், நகா் நல அலுவலா் சரோஜா, மண்டலத் தலைவா் பாலகுருசுவாமி, சுகாதார ஆய்வாளா் ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா். மருத்துவா் சந்தியா நன்றி கூறினாா்.