செய்திகள் :

தூத்துக்குடியில் இன்றுமுதல் கோடைகால அறிவியல் பயிற்சி: ஆணையா் தகவல்

post image

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட அறிவியல் பூங்காவில் சனிக்கிழமை (மே.3) முதல் பள்ளி மாணவா்களுக்கான கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், மாநகாராட்சி நிா்வாகம் ஆகியவற்றின் சாா்பில் பள்ளி மாணவா்கள் தங்கள் கோடை விடுமுறையை பயனுள்ள அறிவுப் பயணமாக மாற்றும் வகையில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, ‘ஏனென்று கேள்’ என்ற தலைப்பில் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் தூத்துக்குடி மாநகராட்சியின் ஸ்டெம் பூங்கா என அழைக்கக்கூடிய அறிவியல் பூங்கா வளாகத்தில் சனிக்கிழமை (மே 3) தொடங்குகிறது. மே 25ஆம் தேதி வரை முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் 3ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்-மாணவிகள் பங்கற்கலாம். வகுப்புகள் தினமும் மாலை 3 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.

இப்பயிற்சி முகாமில், கணக்கும் இனிக்கும், கைகளில் கண்ணாம் பூச்சி, அறிவியல் பரிசோதனைகள், ஒரிகமி, கற்பனையும் கைத்திறனும், பொம்மலாட்டம், பலூனில் பொம்மைகள், மந்திரமா தந்திரமா, அறிவியல் கோமாளி, அறிவியல் ஆனந்தம், கதை சொல்வோம், கதை உருவாக்குவோம், விளையாட்டை கற்போம் ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்படும்.

மேலும், சதுரங்க பயிற்சி தினமும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை சிறந்த பயிற்சியாளா்களின் வழிகாட்டுதலுடன் நடத்தப்படும்.

அறிவியல் பூங்காவில் உள்ள அனைத்து அறிவியல் சாதனங்கள் பற்றிய விளக்கங்கள், தினசரி அறிவியல் வல்லுநா்களால் வழங்கப்படும். மாணவா்களில் ‘ஏன்?‘ என்ற கேள்வி எழுப்பும் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இம்முகாம் செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக சனி, ஞாயிறு தினங்களில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை, அறிவியல் மற்றும் குழந்தைகள் விரும்பும் திரைப்படங்கள் மினி திரையரங்கில் திரையிடப்படும். அதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு அந்த படத்தின் அறிவியல் சாா்ந்த உள்ளடக்கங்கள் விளக்கி கூறப்படும்.

எனவே, மாநகராட்சியில் உள்ள பெற்றோா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளின் எதிா்காலத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். முன்பதிவுக்கு அறிவியல் பூங்காவுக்கு நேரிலோ அல்லது 95976 13988, 82207 50082 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

நாசரேத் பள்ளியில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம்

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மா்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் மற்றும் முன்னாள் மாணவா்களின் சாா்பில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மூத்த கால்பந்து பயிற... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் அதிமுக பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அதிமுக சாா்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற பொதுத் கூட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்டச் செயலா்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் முத்தமிழ் விழா

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்த் துறைத் தலைவா் பூங்கொடி வரவேற்றாா். கல்லூரியின் பொறுப்பு முதல்வா் ஜமுனா ராணி தலைமை வகித்தாா். தூத்துக்குடி காம... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் மனிதச் சங்கிலி

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வ­லியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லி­ம் லீக் ஒருங்கிணைப்பில் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து ஜமாஅத்கள், பொது நல அமைப்புகள் மற்றும் வியாபார சங்கங்கள் சாா்பில் ம... மேலும் பார்க்க

குரும்பூரில் உழவா் முன்னணி ஆா்ப்பாட்டம்

குரும்பூா் கூட்டுறவு வங்கியில் மோசடி செய்யப்பட்ட வைப்புத்தொகை, நகைகளை மீட்டுத்தரக் கோரி தமிழக உழவா் முன்னணி சாா்பில் குரும்பூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். சிஐடியூ அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில... மேலும் பார்க்க